Home / News / Cine News / உலகத் திரைப்பட விழாக்களில் பாராட்டினை பெற்ற திரைப்படம் ‘மனுசங்கடா’..!

உலகத் திரைப்பட விழாக்களில் பாராட்டினை பெற்ற திரைப்படம் ‘மனுசங்கடா’..!

உலகத் திரைப்பட விழாக்களில் பாராட்டினை பெற்ற திரைப்படம் ‘மனுசங்கடா’..!
 
மனித உரிமைக்குரல் எழுப்பும் படம் ‘மனுசங்கடா’..!
 
கோவா உலகத் திரைப்பட விழாவில்  திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப் படம்   ‘மனுசங்கடா’..!
 
‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ‘மனுசங்கடா’..!
பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பெரும் பாராட்டினை பெற்ற திரைப்படம் ஏ.கே.பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘மனுசங்கடா’. இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார்.
மத்திய அரசால் கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உலகத் திரைப்பட விழாவில் சென்ற ஆண்டு  திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப் படம் இது. புகழ் பெற்ற  கெய்ரோ உலகத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
ராஜீவ் ஆனந்த், சசிகுமார், மணிமேகலை,ஷீலா, விதுர், ஆனந்த் சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: பி.எஸ்.தரன், இசை: அரவிந்த் – சங்கர். பாடல்: இன்குலாப். படத்தொகுப்பு: தனசேகர்.
தயாரிப்பு: தாரா, கண. நட்குணன்.
‘பரியேறும் பெருமாள்’ படத்தை போன்றே  பல பரபரப்பான உண்மைச் சம்பவங்களை அடிப்படியாகக் கொண்டு தீண்டாமைக் கொடுமைகள் பற்றி எடுக்கப்பட்ட இப்படம் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.
A K Films  `Manusangada` participated as the only Tamil film in the last year International Film Festival of India held in Goa. It was also one of the films selected for ICFT UNESCO Gandhi Medal award. Subsequently it participated in several international film festivals including the prestigious Cairo International Film Festival.
The film is about the caste prejudices that still exist in India. It is based on true events.
Rajeev Anand, Sasi Kumar, Manimekalai, Sheela, Vidhur and  Anand Sampath have acted in important roles. Camera: P.S.Dharan. Music : Aravind-Shankar. Editing: Dhanasekar. Lyric:Inquilab.
Produced by S.Thara and Gana.Natkunan. Amshan Kumar, the National  Award winning film director has written and directed the film. The film is to be released in theaters in October 12.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

Jonita-Gandhi-at-Forum-Vijaya-Mal-1

Jonita Gandhi Live Concert at Forum Vijaya Mall, Chennai

[Show slideshow]