Home / News / Cine News / சிவா கதாபாத்திரம் வடசென்னை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையானது – நடிகர் பாவல் நவகீதன்.

சிவா கதாபாத்திரம் வடசென்னை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையானது – நடிகர் பாவல் நவகீதன்.

சிவா கதாபாத்திரம் வடசென்னை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையானது  –  நடிகர் பாவல் நவகீதன்.
          எனக்கு என் அப்பாவை போலவே பத்திரிகையாளராக வரவேண்டும் என நினைத்தேன். கேமராவைப் பார்த்ததும் ஒளிப்பதிவாளராக ஆகவேண்டும் என்ற ஆசை வந்தது. எனது ஊர் செங்கல்பட்டு. அங்கு தான் பள்ளிப் படிப்பை முடித்தேன். படிப்பு ஏறவில்லை. ஆனால் எனது ஆசிரியர் என் அப்பாவிடம் உங்கள் மகனுக்கு நன்றாக கற்பனை வளம் இருக்கிறது. ஆகையால் VISCOM படிக்க வையுங்கள் என்றார். மதிப்பெண் குறைவாக எடுத்ததால் லயோலா கல்லூரியில் Socialogy தான் கிடைத்தது. இரண்டாம் வருடம் காலையில் Socialogy- யும், மாலையில் VISCOM – மும் பயின்றேன். அப்போது இயக்குநராகத் தான் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அங்கு எனக்கு சீனியரான ‘குற்றம் கடிதல்’ படத்தின் இயக்குநர் பிரம்மா சார்  அறிமுகம் கிடைத்தது. பிறகு ‘நாளந்தா வே’ என்ற அமைப்பில் 5 வருடம் குழந்தைகளுக்கு புகைப்படம் எடுத்தல், கதை எழுதுதல், வாழ்க்கை திறன், குறும்படம் எடுத்தல் போன்ற துறைகளில் பயிற்சியாளராக இருந்தேன். பிரம்மா சார் மூலம் குற்றம் கடிதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே நடித்தேன். அதன் பின் ரஞ்சித் சார் இயக்கத்தில் ‘மெட்ராஸ்’ படத்தில் விஜி என்ற கதாபாத்திரமும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.
அந்த படத்தில் நடித்தாலும் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை மட்டும் அப்படியே இருந்ததால், ஒரு படம் இயக்கவும் செய்தேன். ஆனால் இரண்டு மாதத்தில் படம் பாதியில் நின்று விட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு படத்தை இயக்கி முடித்தேன். அப்படத்தில் நான் நடிக்கவில்லை.  கதாநாயகன் கேஸ்ட்ரோ அருண். இவர் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. மலையாளத்தில் சுமார் 15 படங்களில் நடித்த விஷ்ணுப் ப்ரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இது ஒரு திரில்லர் படம். இப்படத்தைப் பற்றிய மேலும் தகவல்களை படம் வெளியாகும் போது கூறுகிறேன்.
இதன் பிறகு மகளிர் மட்டும் படத்தில் நடித்தேன். அப்படமும் எனக்கு நல்லப் பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில், வடசென்னையில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது கதையைப் பற்றியும், எனது கதாபாத்திரத்தைப் பற்றியும் எதுவும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு இயக்குநர் வெற்றி மாறன் சார் மீது நம்பிக்கை இருக்கிறது. எனது நடிப்பைப் பார்த்து எனது கதாபாத்திரத்தை நீடிக்கச் செய்திருக்கிறார். மேலும், வெற்றி மாறன் சார் என்னிடம் படம் இயக்குவதை பிறகு பார்த்துக் கொள். நடிப்பு உனக்கு நன்றாக வருகிறது என்று ஊக்குவித்தார். இதற்கு முன் பிரம்மா சாரும், ரஞ்சித் சாரும் இருவருமே என்னை பாராட்டியிருக்கிறார்கள்.
ஆகையால், இனிமேல் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். வடசென்னையில் பவனுக்கு தம்பியாக ‘சிவா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்தைப் பற்றி குறிப்பிட்டு சொல்ல முடியாது. மம்முட்டி சாருடன்  ‘பேரன்பு’ படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படத்திற்காக காத்திருக்கிறேன்.
மம்முட்டி சாருடன் நடிக்கும்போது கூட பயம் வரவில்லை. வடசென்னை குழுவுடன் சேர்ந்து நடிக்கும்போது பயத்துடன் தான் நடித்தேன். ஏனென்றால், தனுஷ் சாரும், சமுத்திரக்கனி சாரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த பிறகு தான் அவர்களுக்கான வசனம் கொடுக்கப்படும். அவர்களும் அதைப் படித்து விட்டு எளிமையாக நடித்துவிடுவார்கள். இனிமேல் நீயும் இந்த திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் என்னை ஊக்குவித்தார்கள்.
 காமெடியனாக நடிப்பதற்கென்று தனி முகம் கிடையாது. சீரியஸான முகம் தான் காமெடிக்கு பொருத்தமாக இருக்கும் . உதாரணத்திற்கு ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை கூறலாம். அவர் இவ்வளவு பெரிய காமெடியனாக வருவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
“VETRIMAARAN SIR USED TO TELL ME THAT MY CHARACTER ‘SHIVA’ IS GETTING MORE PROMINENCE THAN OTHERS IN VADA CHENNAI” – PAVEL NAVAGEETHAN
Many have dreams and desires, few take it seriously embarking on the journey to accomplish and very rarely, few among them have their gold struck. But rarest among the rarity are the ones, who begin striding up with their dreams and during the middle of run realize that the destiny had some other plans for them. Such happens to be the curious case of actor Pavel Navageethan, who took off with his filmmaking ambitions and finally has landed up as an actor. “My father being a journalist inspired me a lot from childhood. But what fascinated me more than becoming a journalist or writer was handling a camera as my father had bought one. Off the late, I was suggested to pursue Visual Communication in Loyola College, which I couldn’t make it. However, I happened to get sociology and had an option to pursue Visual Communication by afternoon. Following this, I happened to be a part of theatre group, where I got acquainted with National award winning filmmaker Bramma G. Over there, I got an opportunity to make short films funded by UNICEF and later we realized we have to do a full length feature film of our own interests. That’s how we made our film Kuttram Kadithal.
Pavel Navageethan adds saying that he had completed working on many scripts and continued to approach many producers by that time. Apparently, when Pa Ranjith had referred him to meet Studio Green Films Producers, he got an opportunity to play an important role of “Viji” in Madras. Although, Kuttram Kadithal won National awards, Navageethan feels that he was frequently identified as ‘Madras Viji’.
He continues to say, “Before three years, the offers of “Magalir Mattum” and “Vada Chennai” made me go through a compulsive change in my journey. Yes, especially with Vada Chennai, I was initially offered with a span of just 10 days schedule. The assistant directors told me that my role would be extended based on how it shapes up with my performance. Finally, it has become so much maximized that Vetrimaaran Sir used to tell me that my character “SHIVA” is getting more prominence than others in Vada Chennai.”
Pavel Navageethan says, “While working with the entire team of Vada Chennai, it was a complete different world. Everyone was so much experienced. The scene and dialogue papers would be given only on the sets and there was no time for home work or preparations. While Dhanush sir and Samuthirakani sir would give their performances in ease, I would be little afraid. But as both of them and all other senior actors opened up to me, I just got easier to give my best. When it comes to Vetrimaaran sir, I had a kind of fear that later got transformed into respect and now a pure love. Now I am feeling little disappointed, whether I would meet him as the entire work of ‘Vada Chennai’ is over.  He gave me a complete confidence saying, “Till now, you’ve been in a dilemma of becoming an actor. But now, just don’t give upon acting and you can sacrifice your filmmaking ideas as well.”
Winding up with his interactions, Pavel Navageethan says that he has somehow managed to fulfill his directorial dream as well. Very soon, he will be making an official announcement pertaining to them, which happens to be an investigation thriller.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

9

CO-PRODUCER KALAIARASU ON BOX OFFICE SUCCESS AND SCREEN COUNTS INCREASED FOR ‘KANAA’

CO-PRODUCER KALAIARASU ON BOX OFFICE SUCCESS AND SCREEN COUNTS INCREASED ...