Home / News / Cine News / நிஜ வாழ்க்கையோடு ஒன்றிபோகும் ‘இருட்டு’

நிஜ வாழ்க்கையோடு ஒன்றிபோகும் ‘இருட்டு’

நிஜ வாழ்க்கையோடு ஒன்றிபோகும் ‘இருட்டு’
வெள்ளிக்கிழமை என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, அன்றைய தினம் வெளிவரக் கூடிய புதுப் படங்களின் பட்டியல் தான். ஆனால் தற்போதோ, புதுப்படங்கள் என்றில்லாமல் திகில், த்ரில், பேய் படம் போன்ற வகையான படம் ஏதாவது ஒன்றாவது வந்துவிடாதா? என்பது தான் மக்கள் எதிர்பார்ப்பின் உச்சம். அதுக்கேற்றால்போல், நாளுக்கு நாள் இது போன்ற படங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்களும் அதையேத்தான் அதிகம் விரும்புகின்றனர். பயப்பட வேண்டும் என்னும் நோக்கத்தோடு வரும் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய இயக்குநர்களும் ஆர்வமாக இருக்கின்றனர்.
 
அதைச் சரியாக புரிந்த கொண்ட இயக்குநர் துரை.VZ இருட்டு என்ற படத்தை இயக்குகிறார். அவர் இப்படத்தைப் பற்றி கூறியதாவது :-
 
‘இருட்டு’, ஏற்கனவே வெளியான பேய் படம், திகில், த்ரில்லர் போன்றில்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அதாவது கற்பனையாக நமது நிஜ வாழ்வில் ஒரு பேயோ, பிசாசோ இருந்தால் எப்படி இருக்கும் என்பது பற்றி வந்திருக்கும். அல்லது யாரோ ஒருவரால் கொல்லப்பட்டு, இன்னொருவரின் உடம்பில் புகுந்து தன்னைக் கொன்றவர்களை பழி வாங்கும்படியாக அமைந்திருக்கும். ஆனால், இப்படம் முற்றிலும் வித்தியாசமாக இதுவரை வந்த எந்த கதையம்சங்களோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத வகையில் இருக்கும். மேலும், வித்தியாசமான கதை என்றில்லாமல் வித்தியாசமான கருத்தைத் தாங்கி கொண்டு வரவிருப்பதால் இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு அவரவர் தங்கள் நிஜ வாழ்க்கையோடு தொடர்பு ஏற்படுத்தியோ, ஒப்பீடு செய்தோ பார்க்கும் வகையில் இருக்கும். பேய் இருக்கிறதா? இல்லையா? என்றொரு விவாதம் நடந்துக் கொண்டிருந்தாலும், அதைவிட பயங்கரமான சம்பங்கள் அதைவிட பயங்கரமான சம்பங்கள் நடந்திருக்கிறது என்று ஒரு சாரரும், அது எப்படி நடந்திருக்க முடியும்? என்று ஒரு சாரரும் விவாதம் நடத்தும் அளவிற்கு இப்படமாக இருப்பதே இதன் சிறப்பம்சம்.
 
வித்தியாசமான படம் தோன்றிய விதத்தைப் பற்றிக் கூறும்போது
 
முதலில் நானும் சுந்தர்.சி-யும் ஒரு படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தவுடனேயே சுந்தர்.சி. நீங்கள் ஒரு திகில் படம் தான் இயக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், எனக்கு அது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது. ஏனென்றால், எனக்கு திகில் படம் என்றால் பயம். ஆகையால் நான் இதுவரை ஒரு பேய் படம் கூட பார்த்தது கிடையாது. இருப்பினும், சுந்தர்.சி. உங்களுக்கு இயக்கும் திறமை நன்றாக இருக்கிறது. நீங்கள் திகில் படம் இயக்கினால் நிச்சயம் வெற்றிபெறும் என்று ஊக்கப்படுத்தினார். அவர் கொடுத்த ஊக்கத்தினால் தான் நான் ‘இருட்டு’ இயக்க சம்மதித்தேன். அதன்பிறகு, எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளிலும் உள்ள நிறைய பேய் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். அனைத்துப் படங்களுமே மக்களை சந்தோஷப்படுத்தும் வகையில்தான் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இதிலிருந்து சற்று வித்தியாசமாகவும், முற்றிலும் வேறுபாடு உள்ளதாகவும் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் காரணமாக யோசிக்கும்போதுதான் இப்படத்தின் கருத்து உதித்தது. அந்தக் கருத்து எல்லோருடைய வாழ்விலும் ஒன்றி போகும் விதமாகவும் இருக்கவே, சுந்தர்.சி-யிடம் கூறினேன். அவருக்கும் மிகவும் பிடித்து போகவே, ரொம்ப நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அதன்பின் படப்பிடிப்பை ஆரம்பித்தோம்.
 
சுந்தர்.சி இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக வருகிறார். இயக்குநராக இருந்தாலும், இப்படத்தின் கதாபாத்திரத்திற்கேற்ப தன்னுடைய நடை, உடை, உடல்மொழி அனைத்தையும் மாற்றிக் கொள்ள பயிற்சி மேற்கொண்டார். இவருடைய மனைவியாக ஷாக்ஷி பர்விந்தர் நடிக்கிறார். தன்ஷிகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது சினிமா வாழ்க்கையிலே இப்படமும், இப்படத்தில் வரும் தனது கதாபாத்திரமும் யாராலும் மறக்க முடியாததாக அமையும் என்றும் கூறியிருக்கிறார். முழுக்க முழுக்க திகில் படம் என்றாலும் நகைச்சுவையைத் தாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், VTV கணேஷும் பயணிப்பார்கள்.
 
படத்தின் பெரும்பங்கு காட்சிகள் ஊட்டியில் படபிடிப்பு முடிந்த நிலையில், தன்ஷிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் சூரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில காட்சிகளே மீதம் உள்ளது. அதையும் ஊட்டியிலேயே படமாக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
 
இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்: இசை – கிரிஷ் கோபாலகிருஷ்ணன், ஒளிப்பதிவு – E.கிருஷ்ணசாமி, படத்தொகுப்பு – R.சுதர்சன், வசனம் – இந்திரா சௌந்திரராஜன், கலை – A.K.முத்து, புகைப்படம் – சாரதி, வடிவம் – PK விருமாண்டி மற்றும் நிர்வாக தயாரிப்பு – APV மாறன்.
 
இவ்வாறு ‘இருட்டு’ படத்தைப் பற்றி இயக்குநர் துரை VZ கூறினார்.
 
 
“IRUTTU owns a newfangled horror premise with realistic concept, which will be debated and discussed” – Dhorai VZ 
Horror films and its sub-categorized genres have become an integral part of Friday releases. As they run into monstrous figures, the audiences have indeed received them well. But at the same time, they’ve desired to explore something unique and exceptional in the same zone. Filmmaker Dhorai VZ assures that ‘IRUTTU’ will definitely offer them a different experience. “Iruttu owns a newfangled horror premise with realistic concept, which will be debated and discussed by audiences,” says Dhorai VZ.
So how did the origin of ‘IRUTTU’ from script papers to celluloid happen?
Director Dhorai VZ says, “When the project involving my directorial with Sundar C sir in lead role was confirmed, the first thing he asked me was to work on a horror script. To make an open confession, I am so scared to watch a horror film and hadn’t watched till this moment the project was zeroed in. In fact, under such a condition, I had to break myself into relentless viewing of horror flicks in different languages and regions.  It was then we just got an idea, if I could attempt something new in the same zone or horror. Thereupon, I happened to come across a concept that had several advocacies for and against such belief in real life. It was far-more scarier than a ghost or Devil and this instantly propelled me to carry this into the scripting process.” Having said this, Dhorai VZ adds that the intention of  this film is simple, which is to amuse audiences with chills and thrills along with some discussions to take back home.
While sharing the experience of working with Sundar C and others in the team, Dhorai conveys, “Sundar C sir has been so much supportive throughout the shoot. In fact, when I narrated him the script, he just gave a positive feedback saying the film will definitely work out. He will be seen playing the role of a cop while Sakshi Parvinder as his wife. Dhansika will be seen in a completely different role from her erstwhile movies and her characterization is so much substantial. Yogi Babu and VTV Ganesh sir aren’t simply included for hilarious episodes, but they do have a significant role to perform.”
While major portions of the film have been already completed shot in Ooty, the team is busy now shooting the episodes involving Dhansika in Surat. After this, the entire crew will move down to Ooty for the final schedule which together summed up has just 15% shoot pending.
The technical team of Iruttu comprises of Girishh Gopalakrishnan (Music), E. Krishnasamy (Cinematography), R Sudharsan (Editing),  Indra Soundarajan (Dialogues), AK Muthu (Art), Sarathy (Stills), PK Virumandi (Designs) and APV Maran (Executive Producer).
IRUTTU is produced by Screen Scene Media Entertainment Pvt Ltd.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

9

CO-PRODUCER KALAIARASU ON BOX OFFICE SUCCESS AND SCREEN COUNTS INCREASED FOR ‘KANAA’

CO-PRODUCER KALAIARASU ON BOX OFFICE SUCCESS AND SCREEN COUNTS INCREASED ...